அத்தியாவசிய ஊழியர்களின் சம்பளம் உயர்வு
கனடா நாடு முழுவதும் உள்ள அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியுள்ளார், இந்த நாட்டை வழிநடத்த நீங்கள் உங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து செயல்படுகிறீர்கள், ஆனாலும், குறைந்த ஊதியத்தை சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று அவர் கூறியுள்ளார்

அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை மாதத்திற்கு 1,800 டாலருக்கும் குறைவாக இருக்க கூடாது என்னும் வகையில், இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 1,35,963 ரூபாய் அளவுக்கானது.
பிரதமர் அறிவிப்பை கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள்" என்று ஹெல்த்கேர் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட் கூறினார்.
கோவிட் -19 பிரச்சினையால், தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் இறந்துவிட்டதாகவும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக இருந்து வருவதாகவும், ஸ்டீவர்ட் கூறினார்.
அத்தியாவசிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிமுகம் செய்துள்ள கனடா பிரதமரின் உத்தரவு பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நாடுகளுக்கு மத்தியில், கனடா முன்னுதாரணமாக திகழ்கிறது.
இதனிடையே கனடாவில் 67 ஆயிரத்து 702 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பின் மையமாக திகழ்கிறது மாண்ட்ரீல் தீவு. அங்கு மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவின் தீவிரம் இன்னும் ஓயாத நிலையில் கியூபெக் மாகாணத்தை மீண்டும் வணிகத்திற்கு திறக்க அம்மாகாண ஆளுநர் முடிவு செய்திருப்பது நாட்டையே மோசமான நிலைக்கு தள்ளிவிடும் என கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment