கொரோனா பாதித்த மருத்துவ தம்பதிக்கு தொற்றில்லா ஆண் குழந்தை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர் புதிய தனி வார்டு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் வைரஸ் பாதிப்பு உறுதியானது.
அவசரகால பணிக்காக, அதே மருத்துவமனையில் மருத்துவரின் 9 மாத கர்ப்பிணி மனைவி பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார். கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணிநேரத்தில், மனைவிக்கும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே பிரசவம் நடக்கும் என்று கூறப்பட்டது.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடித்து பிரசவம் மேற்கொள்ளப்படும். மருத்துவர்கள் முறையான சிகிச்சைகளை வழங்குவார்கள். அனைத்து மருத்துவ உபகரணங்களும் வைரஸ் தொற்று நீக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.
கொரோனா சிகிச்சை அளிக்க பணியாற்றிய பயிற்சி மருத்துவருடன், அவசரகால பணிக்காக மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அவரது கர்ப்பிணி மனைவிக்கும் வைரஸ் பாதித்து உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று இரவு கர்ப்பிணி மருத்துவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெண் மருத்துவர் நீரஜா பட்லா தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில், மருத்துவ தம்பதிக்கு அறுவை சிகிச்சை வழியே ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை வைரஸ் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமுடன் உள்ளது.
எனினும், தாய் மற்றும் சேய் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். கொரோனா வைரஸ் தாய்ப்பால் வழியே பரவாது. அதனால் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டப்படும். பிரசவத்திற்கு பின்னர் தாய் மற்றும் சேய் இருவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மருத்துவர் நீரஜா செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments
Post a Comment