சிறப்பு மருத்துவமனையை மூடியது சீனா
உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் இருந்துதான் வெளிப்பட்டது. உகான் நகரில் மிக வேகமாக கொரோனா பரவியதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேகமாக 9 நாட்களில் சீனா மருத்துவமனை ஒன்றை கட்டியது. சுமார் ஆயிரம் படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.உகான் நகரில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டது.

Comments
Post a Comment