கொரோனா பாதிப்பு காலத்தில் மிகவும் பாதுகாப்பான நாடுகள்
கொரோனா பாதிப்புக்கு இதுவரை உலகமெங்கும் 147, 337 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது உலகின் பாதுகாப்பான நாடு எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தை மிகவும் சிறப்பாக கையாண்டு பொதுமக்களை பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான நாடுகளாக கருதப்படுகிறது.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று தற்போது குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், எது பாதுகாப்பான நாடு என்பதை பட்டியலிட்டுள்ளது.அதில், தனிமைப்படுத்தப்பட்ட செயல்திறன், அரசாங்க மேலாண்மை திறன், கண்காணிப்பு மற்றும் கண்டறிதல், அவசர சிகிச்சை தயார்நிலை ஆகியவற்றை அவர்கள் அடிப்படையாக எடுத்துக் கொண்டனர்.
இதன் அடிப்படையில், இந்த கொரோனா காலகட்டத்தில் உலகின் மிகவும் பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என கண்டறிந்துள்ளனர்.இஸ்ரேல் நாட்டில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 12,855. ஆனால் அவர்கள் மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல், இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசாங்க நிர்வாக செயல்திறனுக்காக அதிக மதிப்பெண்கள் பெற்றது மட்டுமின்றி மொத்த மதிப்பெண்களாக 632.32 ஐப் பெற்றது.
இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி உள்ளது. உண்மையில், அவசர சிகிச்சை தயார்நிலை, கண்காணிப்பு மற்றும் கண்டறிதலுக்காக ஜெர்மனி இஸ்ரேலை விட அதிக மதிப்பெண் பெற்று உள்ளது.
உலக அளவில் மட்டுமின்றி, ஐரோப்பாவில் மிகவும் பாதுகாப்பான நாடு என்ற பெயரையும் ஜெர்மனி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்
1. இஸ்ரேல்
2. ஜெர்மனி
3. தென் கொரியா
4. ஆஸ்திரேலியா
5. சீனா
6.நியூசிலாந்து
7. தைவான்
8. சிங்கப்பூர்
9. ஜப்பான்
10. ஹாங்காங்
Comments
Post a Comment