இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு மனிதர்களிடம் பரிசோதனை

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு மனிதர்களிடம் பரிசோதனை


     

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகநாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


இங்கிலாந்தில் கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான 21 ஆராய்ச்சி திட்டங்கள்,  செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்திய மதிப்பில் 133 கோடி ரூபாய் (14 மில்லியன் பவுண்ட்டு ) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய  பணிக்குழுவை அந்நாட்டு அரசு ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மருந்தின் மாதிரிகள்  தயார் நிலையில் உள்ளன. அதன் மீது இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெறும் நிலையில், மருந்து கண்டுபிடிப்பு, சோதனை வெற்றி ஆகியவை நிறைவடைந்ததும், அவை உடனடியாக பொதுமக்களை சென்றடைவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலான்ஸ் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனாதான் வான் டாம் தலைமையில் பணிக்குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.

அக்குழு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு மனிதர்களிடம் பரிசோதனை செய்வதற்கான முயற்சியை அடுத்த வாரம் மேற்கொள்கிறது.  அடுத்த ஏழு நாட்களுக்குள் இங்கிலாந்து தன்னார்வலர்களை வைத்து சோதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த அணியை வழிநடத்தும் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட் ஆவார்.

Comments