பிரதமர் மோடி கூறிய 7 வேண்டுகோள்கள்
கொரோனா வைரசின் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய 7 அம்சங்களை பட்டியலிட்டார்.

மோடி கூறியதாவது;-
1. வீட்டில் இருக்கும் முதியவர்கள், ஏற்கனவே உடல் நலப் பிரச்சனை உள்ளவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. ஊரடங்கின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
3. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றலாம்.
4. மத்திய அரசு உருவாக்கியிருக்கும் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களையும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம்.
5. உங்களுக்கு அருகாமையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்குங்கள். உதவிகளை செய்யுங்கள்.
6. தொழில் நிறுவனங்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம்.
7. இந்த கடினமான சூழலில் முன்னின்று பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment