சுவை மற்றும் வாசனையை இழப்பது கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறி

இங்கிலாந்து பத்திரிகையான இன்டிபென்டன்ட் பத்திரிகையின் தகவல் படி, பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் ஓட்டோரினோலரிங்காலஜி (ஈ.என்.டி யுகே) கொரோனா நோய்களுக்கான பிற அறிகுறிகள் இல்லாத நிலையில்" புதிய அறிகுறி கண்டறியப்பட்டதாகவும், இந்த அறிகுறியைக் கொண்டிருப்பவ்ர்கள் வைரஸின் மறைக்கப்பட்ட கேரியர்கள் ஆவார்கள் என கூறி  உள்ளது.



இந்த அமைப்பு இங்கிலாந்தில் காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர்களைக் கொண்டுள்ளது, மேலும் இது சீனா, இத்தாலி மற்றும் தென் கொரியாவில் உள்ள நோயாளிகள் அனோஸ்மியா எனப்படும் இந்த அறிகுறிகளை உருவாக்கியதற்கு 'நல்ல சான்றுகள்' இருப்பதாகக் கூறி அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா  பாதிக்கபட்ட அனோஸ்மியா பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதை சுட்டிக்காட்டும் ஒரு அறிக்கையை ஈ.என்.டி பிரிட்டனின் தலைவர் பேராசிரியர் நிர்மல் குமார் மற்றும் பிரிட்டிஷ் ரைனோலாஜிக்கல் சொசைட்டியின் தலைவர் பேராசிரியர் கிளாரி ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ளனர்.

Comments