கழிவறை மூலம் கொரோனா பரவுமா?

பயன்படுத்தப்பட்ட கழிப்பறைத் தண்ணிரின் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.



மனிதர்கள் பயன்படுத்திய கழிப்பறை தண்ணீரின் மூலமாகவும் கொரோனா நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் கழிவறையில் சுத்தத்தைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சிடிசி (சென்டர் ஃபார் டிசீஸ் கன்ட்ரோல்) அறிக்கைப்படி தொடுதல் காரணமாகவும், தும்மும்போதும் மற்றவர்களின் மீது படும் எச்சில் காரணமாகவும் 6 அடி தூரத்துக்கு கொரோனா பரவும் எனப்படுகிறது.

ஆனால் ஸ்டான்போர்டு பல்கலை., விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பின்படி நோயாளியின் மனித கழிவின் மூலமாகவும் கொரோனா மற்றவருக்குப் பரவும் வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கைகள் மூலம் பரவும் அபாயத்தை விட இதில் அபாயம் குறைவு என சிடிசி தெரிவித்துள்ளது. எனவே பொது கழிப்பறைகளை முடிந்தவரை இந்த காலகட்டத்தில் தவிர்த்து வீட்டு கழிப்பறைகளைப் பயன்படுத்துவது நல்லது.

Comments