கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்

கொரோனா வைரசில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில், அந்த வைரசால் பாதிக்கப்பட்ட 101 வயது முதியவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளது, பலருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ், இத்தாலியை கடுமையாக பாதித்துள்ளது. அந்த வைரசால் பாதிக்கப்பட்ட 9,134 பேர் உயிரிழந்துள்ளனர். 86, 498 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். கொரோனாவை தடுக்க அந்த நாடு கடுமையாக போராடி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டை சேர்ந்த 101 வயது முதியவர் சிகிச்சையில் குணமடைந்து 



இத்தாலியின் ரிமினி நகரை சேர்ந்த அந்த முதியவர், 1919ம் ஆண்டு பிறந்தவர். அந்த காலகட்டத்தில் தான் ஸ்பானிஸ் புளு காய்ச்சல் காரணமாக உலகளவில் 5 கோடி பேர் உயிரிழந்தனர். அப்போது பிறந்த இவருக்கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரிமினி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதில்,உடல்நிலை சீரானது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் முதியவரை வீட்டிற்கு அழைஇது தொடர்பாக ரிமினி நகர துணை மேயர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல முதியவர்கள் உயிரிழந்த நிலையில், 101 வது முதியவர் குணமடைந்துள்ளது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் அனைவரின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பார்க்க முடிகிறது என தெரிவித்துள்ளார்.

Comments