கொரோனா பாதிப்பு; அமெரிக்கா முதலிடம்

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது.  இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது.



மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 260-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 1295-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முண்ணனியில் இருந்த சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 

Comments