தமிழ் சினிமாவில் வெகு நாட்களாக தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஜிப்ஸி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நல்ல படத்தை தணிக்கை குழுவினர் கத்தரித்துவிட்டனர் என படக்குழுவினர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஜீவாவும் பல படங்களில் தன்னுடைய சமூக பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், கொரோனாவால் மக்கள் வீடுகளில் தங்கியிருக்கவேண்டும், வெளியில் நடமாடக் கூடாது என கோரிக்கை வைப்பதற்காக தனது ட்விட்டர் ஐடியின் பெயரையே மாற்றியுள்ளார்.
வெளியில் நடமாடுபவர்களை அறிவுறுத்தி வீட்டுக்குள் செல்ல காவல்துறையினர் விடுப்பு இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் வீம்புக்காக இளைஞர்கள் வெளியில் நடமாடுவதாகவும், அவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டுவதாகவும் கூறிவருகின்றனர் சிலர். இதை சித்தரிக்கும் விதமாக காமெடியாக இந்த பதிவை இட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.
ஜீவா பெரிய அளவில் வெற்றிப் படங்கள் கொடுக்காவிட்டாலும், அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் ரசிகர்களும் ஜீவாவை ஆதரிப்பார்கள். இந்த பதிவிலும் பல விஜய் ரசிகர்கள் ஜீவாவை பாதுகாப்பாக இருக்க கேட்டுள்ளனர்.

Comments
Post a Comment