வானியல் அதிசயம்: சூரியனை கடந்த வெள்ளி

வானியல் அதிசயம்: சூரியனை கடந்த  வெள்ளி.

வீனஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெள்ளி கோளானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் அபூர்வ நிகழ்வு பிரிட்டிஷ் நேர கணக்குப்படி செவ்வாய்க்கிழமை (5-6-2012) இரவு பதினோறு மணிக்கு துவங்கி அடுத்த ஆறரை மணி நேரம் வெள்ளியானது சூரியனை கடந்தது.



பிரிட்டிஷ் நேர கணக்குப்படி செவ்வாய்க்கிழமை (5-6-2012) இரவு பதினோறு மணிக்கு துவங்கி அடுத்த ஆறரை மணி நேரம் வெள்ளியானது சூரியனை கடந்தது.
வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு.
எனவெ இந்த நிகழ்வை அன்று பார்த்தவர்கள் தங்களின் வாழ்நாளில் இது அடுத்த முறை நடப்பதை பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்) நடந்திருக்கிறது. இது எட்டாவது நிகழ்வு.
எனவே இந்த அபூர்வ நிகழ்வை பார்க்கவும், அதையொட்டிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் வானியலாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராறார்கள்.

Comments